search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிரைவர் தப்பி ஓட்டம்"

    மத்தூரை பகுதிகளில் மணல் கடத்திய லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய டிரைவர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரை பகுதிகளில் லாரியில் மணல் கடத்துவதாக ஊத்தங்கரை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் தென்பெண்ணையாறு கரையோரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மர்ம நபர்கள் ஒரு டாராஸ் லாரியில் மணலை அள்ளி கொண்டிருந்தனர். போலீசார் வருவதை கண்ட மர்ம நபர்களும், லாரியின் டிரைவரும் அங்கிருந்து தப்பி ஓடினர்.

    போலீசார் லாரியை பறிமுதல் செய்து விசாரித்ததில் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி மத்தூரை அடுத்த கருங்கல் நகரைச் சேர்ந்த சங்கர் என்பவருக்கு சொந்தமான லாரி என்பது தெரியவந்தது. இதையடுத்து சங்கர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    டிராக்டர் மோதி தொழிலாளி பலியான சம்பவம் திருப்புறம்பியத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சுவாமிமலை:

    கும்பகோணத்தை அடுத்த சுவாமிமலை அருகே உள்ள திருப்புறம்பியத்தை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 50). பம்பு பிட்டர். இவர் இன்று காலை கும்பகோணத்திலிருந்து திருப்புறம்பியத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அவர் திருப்புறம்பியம் கடைவீதியில் சென்ற போது அந்த வழியாக வந்த ஒரு டிராக்டர் துரைராஜ் மீது மோதியது. 

    இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனை கண்ட டிராக்டர் டிரைவர் டிராக்டரை நிறுத்தி விட்டு தப்பி சென்று விட்டார்.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சுவாமிமலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று துரைராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பி சென்ற டிராக்டர் டிரைவரை தேடி வருகின்றனர். பலியான துரைராஜிக்கு விஜயா என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

    டிராக்டர் மோதி தொழிலாளி பலியான சம்பவம் திருப்புறம்பியத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஸ்ரீபெரும்புதூரில் லாரியில் கடத்தி வந்த ரூ. 20 லட்சம் குட்கா பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #GudkhaSeized

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சுங்கச்சாவடி அருகே பெங்களூர் தேசிய நெடுஞ் சாலையில் இன்ஸ்பெக்டர் விநாயகம், சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது வேகமாக வந்த மினி லாரி நிற்காமல் சென்றது. போலீசார் அதனை விரட்டிச்சென்றனர். உடனே லாரியை டிரைவர் நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார்.

    போலீசார் லாரியை சோதனை செய்த போது அதில் தடை செய்யப்பட்ட குட்கா இருந்தது தெரிய வந்தது. மொத்தம் 145 பெட்டியில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை இருந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ. 20 லட்சம் ஆகும். இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர். குட்கா கடத்தலில் தொடர்புடையவர்கள் குறித்தும் விசாரித்து வருகின்றனர். #GudkhaSeized

    திருவையாறில் லாரி வீட்டின் மீது மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருவையாறு:

    அரியலூரில் இருந்து ஒரு லாரி சிமெண்ட் லோடு ஏற்றிக் கொண்டு தஞ்சை நோக்கி நேற்று இரவு வந்தது. அந்த லாரி நள்ளிரவு 1.30 மணி அளவில் தஞ்சை மாவட்டம் திருவையாறு அய்யனார் கோவில் பகுதியில் வந்து கொண்டு இருந்தது. அப்போது லாரி திடீரென டிரைவரின் கட்டுபாட்டை இழந்து ரோட்டோரம் புதிதாக கட்டப்பட்டு வரும் ஒரு வீட்டின் சுவரில் மோதி கவிழ்ந்தது.

    இதில் சுவரில் சேதம் ஏற்பட்டது. விபத்து நடந்தபோது அங்கு தொழிலாளர்கள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். லாரி சுவரில் மோதியபோதிலும் காயமின்றி உயிர் தப்பிய டிரைவர் அங்கு லாரியை விட்டு விட்டு தலைமறைவாகி விட்டார்.

    இதுபற்றிய தகவல் கிடைத்தும் திருவையாறு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். திருவையாறில் லாரி வீட்டின் மீது மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×